Rainwater Harvesting - Cuddalore Govt ITI Date:12.06.2014


                                         Rainwater Harvesting - Cuddalore Govt ITI 

முன்னுரை :

 தெய்வப் புலவர் “நீரின்றி அமையாது உலகு” என்றார் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள். “மாமழை போன்றதும், மாமழை போற்றுதும்” என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் நீர் தருகின்ற மழையின் சிறப்பினையும் தமிழ்ப்புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர்.
 அனைவருக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர் என்று சொல்லுவது மிகையில்லாத உண்மை. மேலும், ஒரு நாட்டினுடைய வலிமையையும், பெருமையையும் கூட நீர் வளத்தால் கணிக்கப்படுகிறது. இதற்கு மாற்று என்பது இல்லாத காரணத்தால், தண்ணீரை நாம் ஒரு தாய்க்கு ஒப்பாகக் கூறலாம் ஓரிடத்தில் மக்கள் வாழத் தொடங்குவதும், வாழ்வைத் தொடருவதும் அங்குள்ள நீர் வசதியைக் கொண்டுதான் என்று சொன்னால் அது மிகையாகாது.

தண்ணீருக்கு ஆதாரம் :

 குடிநீர் இல்லையயன்றால் குடியிருப்பும் இல்லை. நீரில்லாத போதுதான் இன்னலும், இடம் பெயருதலும் நிகழ்கின்றன. தவிக்கிற மக்களுக்கு மிகவும் தேவைப்படுவது தண்ணீரே. ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை’ என்பது போலத் தண்ணீரிலும் சிறந்ததொரு உயிர்க் காப்பும் இல்லை எனலாம்.
மழை நீர் சேகரிப்பு :
 மழை நீர் வீணாகிவிடாமல் நிலத்திற்குள் அதனைச் செலுத்தி சேமிப்பதை மழை நீர் சேகரிப்பு என்கின்றன நிலத்தடி நீர் குறைவதைத் தடுக்கவும், நீர் வளத்தைப் பெருக்கவும், நீரின் தரத்தை உயர்த்தவும், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் நிலப்பகுதியின் கரையைத் தாண்டி உட்புகுவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரைச் சேமிக்கிறோம். பக்குவமாக சேமித்து, சிக்கனமாகச் செலவு செய்வது அறிவார்ந்த செயலாகும்.

சேமிக்கும் முறை :
 பயிரிடும் முறைகளை மாற்ற வேண்டும். பாசன வழிமுறைகளை மாற்றியும் நீரைப் பயன்படுத்துகின்ற முறையினையும் மாற்றிப் பெயர் அளவில் நீரைச் சேமிக்கலாம். ஏரி, குளங்களைப் பரவலாகப் பெய்கின்ற மழைநீர் முழுவதும் நீர் நிலைகளை வந்தடைய ஆவண செய்ய வேண்டும். வீடுகளில் மழைநீரைச் சேமிப்பதற்குச் சேமிப்புத் தொட்டிகளை அமைத்து வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை மெழுதிய தளமாக மாற்றாமல், மணற்பாங்காகவோ, இயல்பான நிலப்பரப்பாகவோ விட்டு விடுதல் வேண்டும். மாடியில் விழுகின்ற மழை நீரைக் குழாய்கள் மூலம் தரைப் பகுதிக்குக் கொண்டு வந்து, கிணற்றுக்கும் வீட்டுச் சுவருக்கும் இடையிலுள்ள நிலப் பகுதியில் ஒரு தொட்டி அமைத்துச் சேமிக்க வேண்டும் கிணறுகள் இல்லா வீடுகளில், சிறுகால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் மழைநீரைப் பாய்ச்சி, அங்கிருந்து கசிவுநீர்க் குழாய் வாயிலாகக் குழாய்க் கிணற்றுக்குள் செலுத்திச் சேமிக்கலாம். பயன்கள் :
 பெய்த மழைநீரைத் தகுதியான வழிகளில் தேக்கி வைத்துப் பாதுகாப்பதால் நீர்வளத்தைப் பெருக்கலாம் இயற்கை வளங்களைப் பெருக்கி, சுற்றுச் சூழல் பாதுகாப்பையும், மாசுக் கட்டுப்பாட்டையும் பெறலாம். வளிமண்டல ஓசோன் பாதிக்காதவாறு காக்கலாம். அடை மழையினால் புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப் புறப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாய்ப் பெருகி வீணாவதைத் தடுக்கலாம். “இன்றைய சேமிப்பு நாளையத் தேவை” என்பதற்கேற்ப, பருவமழையானது பெய்யாது பொய்க்கும் போது ஏற்படுகின்ற தண்ணீர்த் தட்டுப்பாட்டையும், தலைவிரித்தாடுகின்ற பஞ்சத்தையும் மழைநீர் சேகரிப்பால் ஈடுகட்ட இயலும்.
முடிவுரை :

 நம் பாரத நாடும் பழம் பெரும் நாடு. இந்நாட்டில் இமயம் முதல் குமரி வரை வற்றா வளம் சுரக்கும் பேராறுகள் அன்று தொட்டு இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமாக அமைவது மழையே. ‘உயிரின் உறைவிடம் உடல்; மழைநீரின் உறைவிடம் நிலம்’ எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்துச் சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக் குறையைச் சமாளிக்கலாம் என்பது வெள்ளிடைமலை. “விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி” என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் அரசுடன் சேர்ந்து மழைநீர் சேமிப்பில் ஈடுபட்டால் நாடு நலம் பெறும் நல்ல வளம் பெறும்.
- லியோ அடைக்கலராஜ், JKM 1010

National AnthemJ.ELANGOVAN.J.T.O.GOVT.ITI.TRICHY